தளபதி 69 படத்தில் இணைந்த பிரபல நடிகை.. யார் தெரியுமா
தளபதி 69
தளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் விஜய். இவர் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 திரைப்படத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடித்து கொண்டு வருகிறார்.
இந்த படம் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் கடைசி படம் என்பதால் ரசிகர்களுக்கு மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
சென்னையில் செட் அமைக்கப்பட்டு தளபதி69 ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தளபதி 69 படத்தில் பிரபல நடிகையும் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி சரத்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரபல நடிகை
இவர் சமீபத்தில் தான் அவருடைய நீண்ட கால காதலரான நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது திருமணத்திற்கு பின் மீண்டும் படத்தில் நடிக்க தயாராகி விட்டார் என கூறப்படுகிறது.
விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி வரலட்சுமி ஏற்கனவே 'சர்கார்' படத்தில் விஜய்யுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
