விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ரஜினி பட பிரபல நடிகை.. அட இவரா!
விஜய் சேதுபதி
மக்கள் செல்வன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த மகாராஜா திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்து வசூலில் சாதனை படைத்தது.
தற்போது விஜய் சேதுபதி பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இதை தொடர்ந்து, தெலுங்கில் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான பூரி ஜெகன்நாத் உடன் விஜய் சேதுபதி தற்போது கூட்டணி சேர்ந்திருப்பதாக அறிவிப்பு இணையத்தில் வெளியானது.
அட இவரா!
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஜூன் மாதம் முதல் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படம் குறித்த ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது.
அதன்படி, இப்படத்தில் பிரபல நடிகையான ராதிகா ஆப்தே, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

பிரபல கிரிக்கெட் வீரர் படுக்கைக்கு அழைத்தார் - முன்னாள் கிரிக்கெட்டர் மகள் அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu
