நடிகை ஜோதிகா 3 மாதத்தில் 9 கிலோ குறைத்தது எப்படி?- அவரே சொன்ன விஷயங்கள்
ஜோதிகா
நடிகை ஜோதிகா, 90களில் முன்னணி நடிகைகளாக வலம்வந்தவர்களில் முக்கியமானவர்.
திருமணத்திற்கு பின் திருமணத்திற்கு முன் என நடிகை ஜோதிகாவின் பயணத்தை கூறலாம்.
காரணம் திருமணத்திற்கு முன் காதல் காட்சிகள், பாடல் நடனம் என சிம்பிளான கதைகளாக தேர்வு செய்து நடித்தார், சில போல்டான கதை உள்ள படங்களும் நடித்தார்.
ஆனால் திருமணத்திற்கு பிறகு பெண்களை மையப்படுத்திய மிகவும் தரமான கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
வெயிட் லாஸ்
குண்டாக காணப்பட்ட நடிகை ஜோதிகா 3 மாதங்களில் 9 கிலோ வரையில் உடல் எடைடை குறைத்திருக்கிறார். அவரது எடை இழப்பு பயணத்திற்கு உதவியாக இருந்தது ஊட்டச்சத்து நிபுணர்கள் தானாம்.
அந்த குழுவினரை தனக்கு அறிமுகப்படுத்தியதற்காக நடிகை வித்யா பாலனுக்கு ஜோதிகா நன்றி தெரிவித்துள்ளார். அமுரா குழுவினரின் உதவியாலும், சரியான உடற்பயிற்சி மேற்கொண்டதாலும் ஜோதிகா உடல் எடையை குறைத்திருக்கிறார்.