சூர்யா-ஜோதிகா
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் ரசிக்கப்படும் ஜோடிகளில் முக்கியமானவர்கள் சூர்யா-ஜோதிகா. இருவரும் இணைந்து இருக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழ்நாடே விரும்பியது என்பது தான் உண்மை.
இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகு மக்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார்கள்.
அண்மையில் இருவரும் இணைந்து தேசிய விருது வாங்கினார்கள், பிலிம்பேர் விருது விழாவில் அழகாக ஜோடியாக கலந்துகொண்டு மக்களின் மனதை வென்றார்கள்.
ஜோதிகாவின் வீடியோ
கடந்த அக்டோபர் 18 அதாவது நேற்று அவரது பிறந்தநாள் வந்தது. அனைவருமே ஜோதிகாவிற்கு வாழ்த்து கூறி வந்தார்கள். அவரோ ஒரு சூப்பரான வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சூர்யாவிற்கே பிட்னஸில் டப் கொடுக்கும் அளவிற்கு ஜோதிகா உடற்பயிற்சி வீடியோ வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.