முதன்முறையாக தனது மகனின் கியூட் வீடியோவை வெளியிட்ட நடிகை காஜல் அகர்வால்- செம வைரல்
நடிகை காஜல் அகர்வால்
2004ம் ஆண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் நடிகை காஜல் அகர்வால். ஹிந்தியில் அறிமுகமானாலும் அவர் அதிகம் தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிக படங்கள் நடித்துள்ளார்.
கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் சொந்தமாகவும் நிறைய தொழில்கள் செய்து வருகிறார். 2020ம் ஆண்டு கௌதம் என்பவரை திருமணம் செய்த காஜல் அகர்வாலுக்கு ஒரு மகன் இருக்கிறார்.
திருமணம், குழந்தைக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ள காஜல் அகர்வால் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
மகனின் கியூட் வீடியோ
அவ்வப்போது தனது மகனின் புகைப்படங்களை வெளியிடும் காஜல் அகர்வால் ஒரு கியூட்டான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதாவது அவரது மகன் நீல் Plank செய்யும் வீடியோவை வெளியிட ரசிகர்களும் வீடியோவிற்கு அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
அஜித்தின் துணிவு படத்தின் Overseas கலெக்ஷன்- முழு விவரம்