இயக்குனர் அந்த விஷயத்தை செய்ய சொன்னார், நான் கதறி அழுதேன்!! மனம் திறந்த காஜல் அகர்வால்..
காஜல் அகர்வால்
விஜய், அஜித் என பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வந்தவர தான் காஜல் அகர்வால். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த இவர் தமிழில் இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் சத்யபாமா போன்ற படங்களை லைன் அப் வைத்துள்ளார்.
சமீபத்தில் காஜல் அகர்வால், தனது முதல் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், என்னை முதல் முதலில் தெலுங்கில் தேஜா இயக்கிய லட்சுமி கல்யாணம் படத்தில் நடிக்க அழைத்தார்.
எனக்கு தெலுங்கு தெரியாது அதனால் எப்படி நடிக்க சொல்லுவார்கள் என்று கேள்வி எனக்குள்ளே இருந்தது. அதனால் பதற்றத்தோடு உட்கார்ந்து இருந்தேன் அந்த சமயத்தில் என்னுடைய அப்பாவும் வந்து இருந்தார். இயக்குனர் என்னை அழுது காட்டுங்கள் என்று சொன்னார்.
எப்படி அழுவது என்று யோசித்து கொண்டு இருந்தேம் அப்போது என்னுடைய அப்பா ஒரு வார்த்தை சொல்ல உடனே அழ தொடங்கிவிட்டேன். நீ ரொம்ப அழகாக அழுதாய் என்று இயக்குனர் சொல்லி முதல் பட வாய்ப்பை எனக்கு கொடுத்தார் என்று காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
