பஹல்காம் தாக்குதல், இந்து - முஸ்லீம் மோதல் அல்ல.. நடிகை காஜல் அகர்வால் ஆவேசம்
காஜல் அகர்வால்
ஹிந்தி சினிமாவில் க்யூன் ஹோ கயானா என்ற படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் அறிமுகமாகி பின் தெலுங்கில் 2007ம் ஆண்டு வெளியான லக்ஷ்மி கல்யாணம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் காஜல் அகர்வால்.
தமிழ் சினிமா பக்கம் பரத் நடிக்க பழனி படத்தின் மூலம் அடியெடுத்து வைத்தவர் அடுத்தடுத்து விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், அஜித்துடன் விவேகம், கார்த்தி, சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து மக்களின் பேராதரவை பெற்று வந்தார்.
2020ம் ஆண்டு கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்துகொண்ட காஜல் அகர்வாலுக்கு நீல் என்ற மகன் உள்ளார்.
ஆவேசம்
இந்நிலையில், காஜல் தற்போது பஹல்காமில் நடந்த விஷயம் குறித்து பேசியுள்ளார். பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் இந்து - முஸ்லீம் இடையேயான பிரச்சனை கிடையாது.
ஆனால் அதைத்தான் வெறுப்பாளர்கள் விரும்புகிறார்கள். ஒரு பெயரின் அடிப்படையில் யாரையும் பிரிக்க வேண்டாம். பிரிவினை எப்போதும் பயத்தையும் அதிக எதிர்ப்பு உணர்வை மட்டுமே உருவாக்கும். ஆனால் நாம் ஒரே இனம் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

₹25 கோடி லாஸ் ஏஞ்சல்ஸ் சொகுசு பங்களா முதல் ₹3 கோடி மெர்சிடிஸ் கார் வரை! ஏ.ஆர். ரஹ்மானின் பிரம்மாண்டமான வாழ்க்கை News Lankasri
