5 மாதத்தில் 18 கிலோ வரை எடை குறைத்த நடிகை கஜோல்- வெயிட் லாஸ் டிப்ஸ்
நடிகை கஜோல்
தமிழ் சினிமாவில் ஒரு சில பாலிவுட் பட நடிகைகள் படங்கள் நடித்துள்ளார், சிலர் ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார்கள். அப்படி தமிழ் மக்களால் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் தான் கஜோல்.
பிரபுதேவா, அரவிந்த் சாமி ஆகியோருடன் இணைந்து மின்சார கனவு படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த கஜோல் அதன்பிறகு நீண்ட வருடங்களுக்கு பிறகு சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்தார்.
இப்போது வெப் சீரியஸில் அதிகம் நடித்து வருகிறார்.
வெயிட் லாஸ்
ஒருநாளைக்கு 1-2 மணி நேரம் நடிகை கஜோல் ஒர்க் அவுட் செய்வாராம். மீன் உணவை தான் கஜோல் அதிகம் எடுத்து கொள்வாராம், அதேபோல் வெள்ளை உணவுகளான சர்க்கரை, உப்பு, அரிசி, பால், மைதா ஆகியவற்றை அறவே நிறுத்தி கொண்டாராம்.
ஒருநாளைக்கு 8 டம்ளர் வெந்நீர் குடிப்பாராம். மாலை நேரத்தில் 40 நிமிடம் யோகா செய்வாராம். யோகா செய்ய முடியாத நேரத்தில் வாக்கிங் செல்வாராம்.