சென்சேஷனல் ஹிட்டாகியுள்ள Lokah படத்தில் முதலில் நடிக்கவிருந்தது கல்யாணி கிடையாது! வேறு யார் தெரியுமா
Lokah
சமீபத்தில் வெளிவந்து சென்சேஷனல் ஹிட்டாகியுள்ள திரைப்படம் Lokah. இப்படத்தில் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் கதையின் நாயகியாக நடித்திருந்தார். இவர் தமிழில் வெளிவந்த ஹீரோ, மாநாடு போன்ற படங்களில் இதற்கு முன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
துல்கர் சல்மான் தயாரிப்பில் இப்படத்தை ரூ. 30 கோடி பட்ஜெட்டில் எடுத்துள்ளனர். ஆனால், இதுவரை இப்படம் உலகளவில் ரூ. 145 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் தயாரிப்பாளருக்கு மாபெரும் லாபத்தை இப்படம் கொடுத்துள்ளது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து Lokah யூனிவெர்சில் அடுத்தடுத்த படங்கள் வெளிவரும் என அறிவித்துள்ளனர்.
Lokah படத்தில் கதையின் நாயகியாக நடித்ததன் மூலம் கல்யாணி ப்ரியதர்ஷனுக்கு சிறந்து வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை சோலோ ஹீரோயின் கதைக்களத்தில் வெளிவந்த எந்த படமும் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் சாதனையை படைத்தது இல்லை. அதை முதல் நபராக கல்யாணி செய்து காட்டி சாதனை படைத்துள்ளார்.
முதலில் நடிக்கவிருந்த நடிகை
Lokah படத்தின் மூலம் கல்யாணிக்கு தற்போது தென்னிந்திய அளவில் அணி அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த நிலையில், Lokah படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது கல்யாணி கிடையாது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை பார்வதிதான் Lokah படத்தில் கதையின் நாயகியாக நடிக்க இருந்தாராம். ஆனால், சில காரணங்கள் இந்த கதையை அவர் நிராகரித்துள்ளார். அதன் பின்தான் இப்படத்தில் கல்யாணியை நடிக்க வைத்துள்ளனர். கண்டிப்பாக இது நடிகை பார்வதிக்கு காஸ்ட்லி மிஸ் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.