சம்சாரம் அது மின்சாரம் பட நடிகை கமலா காமேஷ் மரணமா?.. உண்மையை உடைத்த உமா ரியாஸ்!
கமலா காமேஷ்
மூத்த நடிகையான கமலா காமேஷ் 80 மற்றும் 90களில் தென்னிந்திய மொழித் திரைப்படங்களில், அம்மா கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர்.
ஜெயபாரதி இயக்கத்தில் வெளியான குடிசை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தில் இவருடைய நடிப்பை பார்த்து வியந்து போன விசு, அவருடைய நாடகங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். இதைத் தொடர்ந்து, விசுவின் குடும்பம் ஒரு கதம்பம், மணல் கயிறு, சம்சாரம் அது மின்சாரம் போன்ற படங்களில் நடித்தார்.
இதில் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கோதாவரி என்ற கதாபாத்திரம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை படத்தில் பாட்டு சொல்லிக் கொடுக்கும் கார்த்திக்கின் அம்மாவாக நடித்தார்.
அந்த படத்திலும் இவருடைய கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. பின் உடல் நல குறைவால் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
கமலா நடிக்கவில்லை என்றாலும், அவருடைய மகள் உமா ரியாஸ் கான் திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் நடித்து வருகிறார். இவர் பிரபல நடிகர் ரியாஸ் கானை காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
கமலா காமேஷ் மரணம்
இந்நிலையில், உடல்நல குறைவால் அவதி பட்டு கொண்டிருந்த கமலா காமேஷ் இன்று மரணமடைந்துள்ளார் என சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து செய்திகள் உலா வருகிறது. தற்போது, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மகள் உமா ரியாஸ் விளக்கம் கொடுத்துள்ளார்.
"எனது மாமியாரும் ரியாஸ் கானின் தாயுமான ரஷீதா பானுதான் உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டார். என் அம்மா இல்லை" என்று கூறியுள்ளார்.