கரகாட்டக்காரன் நடிகை கனகாவுக்கா இப்படி ஒரு நிலை! உதவியாளர் சொன்ன அதிர்ச்சி விஷயம்
கனகா
90களில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர் தான் கனகா. குறிப்பாக கரகாட்டக்காரன் நடிகை கனகா என்றால் தற்போதையை இளம் தலைமுறையினருக்கு கூட தெரியும்.
தற்போது 49 வயதாகும் கனகா சென்னையில் தனது வீட்டில் தனியாக தான் வசித்து வருகிறாராம். அவர் பழைய வீட்டில் சில மாதங்களுக்கு முன்பு தீவிபத்து ஏற்பட்ட நேரத்தில் அவர் தீயணைப்பு வீரர்களை வீட்டுக்குள் அனுமதிக்காமல் சண்டை போட்டார் என செய்தி வெளியாகி பரபரப்பு ஆனது.
தனிமை
கனகா காதலித்து திருமணம் செய்து இருந்தாலும், அவரது கணவர் திடீரென காணாமல் போய்விட்டார். அதற்கு பிறகு அவர் தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார். மேலும் உறவினர்கள் மோசமாக நடந்து கொள்வதால் கனகா யாருடனும் பழகுவதும் இல்லையாம்.
இதை அவரது உதவியாளர் கூறியதாக செய்தி வெளியாகி இருக்கிறது. கனகா அவரது வீட்டுக்கு பெயிண்ட் கூட அடிக்காமல் இருப்பது பற்றி சொன்னதற்கு 'பார்க்கலாம்' என ஒரே வார்த்தையில் கனகா கூறிவிட்டாராம்.
கனகாவுக்கு அவரது உதவியாளர் தான் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறாராம்.
இயக்குனரை இரண்டாம் திருமணம் செய்கிறாரா ரச்சிதா? பரவும் புது தகவல்