மார்பக புற்றுநோய், வெட்டி எடுத்த மருத்துவர்கள்- சோகமான சம்பவம் குறித்து எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகா
எதிர்நீச்சல்
5 ஸ்டார் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கனிகா. அப்படத்தை தொடர்ந்து எதிரி, ஆட்டோகிராஃப், டான்ஸர், வரலாறு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த கனிகா சச்சின், அந்நியன், சிவாஜி ஆகிய படங்களின் நாயகிகளுக்கு டப்பிங் கொடுத்திருக்கிறார்.
தற்போது படங்களை தாண்டி சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிகையின் பேட்டி
நடிகை கனிகா ஒரு பேட்டியில் பேசும்போது, புற்றுநோய் விழிப்புணர்வு பற்றி என்னுடைய அம்மா நிறைய பேசுவார்.
ஆனால் அவர் அந்த விஷயத்தில் மாட்டிக்கொண்டார், அவருக்கு மார்பில் வலி இருப்பதாக ஃபோனில் எனக்கு சொன்னார், உடனே மருத்துவமனை சென்றோம்.
அந்த நோய் இருப்பது உறுதியானதும், ஹீமோதெரபி, ரேடியேஷன் சிகிச்சை உள்ளிட்ட பல வேதனைகளை அவர் சந்தித்தார். புற்றுநோய்க்கான சிகிச்சையின்போது எனது அம்மா பட்ட வேதனைகளை பார்த்து நொந்து போவேன்.
அவரது மார்பகத்தை பாதுகாப்பு காரணத்துக்காக வெட்டி எடுத்தார்கள். அதை பார்க்கும்போது ரொம்பவே கஷ்டப்பட்டேன் என கஷ்டமான விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri