விஜய்யின் அந்த விஷயத்தை கண்டு வியந்துள்ளேன்- பாலிவுட் நடிகை கத்ரீனா பேட்டி
Merry Christmas
தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம் மெரி கிறிஸ்மஸ்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புடன் இணைந்து நடித்துள்ளார்.
வரும் 12ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. படக்குழுவினர் அடுத்தடுத்து இந்த படத்திற்கான புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடிகையின் பேட்டி
இந்த நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைப் ஆகிய இருவரும் ஒரு பேட்டி அளித்துள்ளனர்.
அதில் நடிகை கத்ரீனா கைப்பிடம், ஒரு விளம்பரத்தில் நடிகர் விஜய்யுடன் நடனம் ஆடியது குறித்து கேட்டுள்ளனர். அதற்கு அவர், விஜய் ஒரு அற்புதமான டான்சர், நான் என் வாழ்க்கையில் நடித்த முதல் விளம்பர படம் அதுதான்.
அப்பொழுது எனக்கு வயது 18, அப்போது நான் நடனத்தில் தேர்ச்சி பெறவில்லை, ஆனால் விஜய் மிகவும் நேர்த்தியாக நடனமாடுவார் என்று கூறியுள்ளார்.

இதை படிக்கும்போது நான் உயிருடன் இருக்கமாட்டேன்., சுவிட்சர்லாந்தில் பிரித்தானிய தாயின் துயரமான முடிவு News Lankasri

நான் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது.. உதயநிதி காய்ச்சலே வந்து படுத்துக்கொண்டார் - இபிஎஸ் IBC Tamilnadu
