அன்று லட்சங்களில், இன்று கோடிகளில்.. நடிகை கயாடு லோஹர் வாங்கும் சம்பளம்..
கயாடு லோஹர்
கன்னடத்தில் வெளியான முகில்பேட் (Mugilpete) எனும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகை கயாடு லோஹர். பத்தொன்பதாம் நூற்றாண்டு (Pathonpatham Noottandu), அல்லூரி, இ பிரேம் யு, ஒரு ஜாதி ஜாதகம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் எப்போது தமிழில் நடிக்கப்போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் தமிழ் திரைப்படமே மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இதன்பின், ஃபங்கி (Funky), பள்ளிச்சம்பட்டி, இதயம் முரளி என தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். அடுத்ததாக இம்மார்ட்டல், I'm Game, தி பாரடைஸ், மஞ்சணத்தி, சூர்யா 48 என பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
சம்பளம்
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் கயாடு லோஹர், 2021-ஆம் ஆண்டு வெளியான தனது முதல் படத்திற்காக ரூ. 1 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

அன்று லட்சங்களில் சம்பளம் வாங்கி வந்த கயாடு லோஹர், இன்று கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். ஆம், தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவான நானியுடன் இணைந்து 'தி பாரடைஸ்' திரைப்படத்தில் கயாடு லோஹர் நடித்து வருகிறார். இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 1.5 கோடி முதல் ரூ. 2 கோடி வரை கயாடு லோஹர் சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இது, நடிகை கயாடு லோஹரின் திறமைக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. மேலும், இனி அடுத்தடுத்த பல வெற்றிகளை கொடுத்து மிகப்பெரிய நட்சத்திரமாக இந்திய சினிமாவில் தனி இடத்தை பிடிப்பார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
அமெரிக்க மாகாணத்தை புரட்டியெடுத்த இசையாஸ் சூறாவளி: நால்வர் பலி..அச்சுறுத்தும் பாதிப்பு News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
அமெரிக்காவில் அடுத்தடுத்த துப்பாக்கிச்சூடு: பெண்கள், கர்ப்பிணி உட்பட 14 பேர் உயிரிழப்பு News Lankasri