தாய்லாந்திற்கு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றுள்ள நடிகை கீர்த்தி பாண்டியன்- வெளியிட்ட கிளாமர் போட்டோஸ்
கீர்த்தி பாண்டியன்
தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் அதிகம் அறிமுகமாகி வருகிறார்கள்.
அப்படி பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தவர் தான் கீர்த்தி பாண்டியன்.
பட்டப் படிப்பை முடித்த கீர்த்தி பாண்டியன் பாலே மற்றும் சால்சா உள்ளிட்ட நடனங்களை கற்றுக் கொள்ள, அதேசமயம் தனது அப்பாவுடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றை மேற்பார்வை செய்து வந்தார்.
கடந்த 2019ம் ஆண்டு வெளியான தும்பா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் கடைசியாக ப்ளு ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்து தற்போது வெற்றியும் கண்டுள்ளார்.
பிறந்தநாள்
இவருக்கு கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகர் அசோக் செல்வனுடன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கீர்த்தி பாண்டியன் தனது பிறந்தநாளை கொண்டாட தற்போது தனது கணவருடன் தாய்லாந்து சென்றுள்ளார்.
அங்கு அவர் கிளாமர் உடையில் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாவிலும் பதிவு செய்துள்ளார்.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
