பல போராட்டங்களை சந்திக்கிறோம் ஆனால்.. பிரபல நடிகர் குறித்து கீர்த்தி சுரேஷ்
பசில் ஜோசப்
மலையாளத்தில் குஞ்சிராமாயணம், கோதா மற்றும் மின்னல் முரளி என மூன்று படங்களை இயக்கியவர் இயக்குநர் பசில் ஜோசப். சின்ன கதாபாத்திரங்களில் காமெடியனாக நடிக்க துவங்கிய இவர், தற்போது முழு நேர நடிகராக சினிமாவில் கலக்கி வருகிறார்.
கீர்த்தி சுரேஷ் ஓபன்
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சினிமா விருதுகள் நிகழ்ச்சியில் பசில் ஜோசபுக்கு 'மேன் ஆப் தி இயர்' என்ற விருது வழங்கப்பட்டது.
அப்போது, பசில் ஜோசப் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் மேடையில் பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " பசில் ஜோசப் தொட்டதெல்லாம் பொன்னாக மாறுகிறது. எங்களைப் போன்ற நடிகர்கள் ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் பல போராட்டங்களை சந்திக்கிறோம்.
ஆனால் வீக்லி ஸ்டார் என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொரு வாரமும் அவரது படம் வெளியாகிறது” என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.