திருமண பந்தத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ், கணவர் ஆண்டனி சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா
கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி
நடிகை கீர்த்தி சுரேஷ், மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி இப்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் வரை கலக்க தொடங்கிவிட்டார்.
மகாநதி படத்திற்காக சிறந்த நாயகிக்கான தேசிய விருதை பெற்று தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார்.
தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் அதை தொடர்ந்து பல வெற்றி படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் கைவசம் தற்போது ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி ஆகிய படங்கள் உள்ளது. 15 வருடமாக ஆண்டனி என்பவரை காதலித்து வந்த நிலையில் நேற்று அவர்கள் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடந்து முடிந்துள்ளது.
எவ்வளவு தெரியுமா
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது கணவர் ஆண்டனி சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு ரூ. 41 கோடி என்றும் அவருடைய கணவர் ஆண்டனிக்கு ரூ. 10 முதல் ரூ. 12 கோடி வரை சொத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
You May Like This Video