நடிகை கீர்த்தி சுரேஷின் பள்ளி பருவ புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் தமிழில் வெளிவந்த திரைப்படம் சாணி காயிதம். நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா மற்றும் மலையாளத்தில் வஷி ஆகிய இரு திரைப்படங்கள் வெளிவந்தது. இந்த இரு திரைப்படங்களும் தொடர் தோல்வியை சந்தித்துள்ளது.

நடிகை கீர்த்தியின் சுரேஷின் கைவசம் தற்போது மாமன்னன் திரைப்படம் உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கி வரும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்தின் இசையமைக்கிறார்.
பள்ளி பருவ புகைப்படம்
நடிகர், நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வைரலாவதுண்டு. அந்த வகையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
