நடிகை குஷ்புவின் அம்மாவா இவர், இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்- பிரபலமே போட்ட பதிவு
நடிகை குஷ்பு தமிழ் சினிமா மக்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் ஒரு நடிகை. குஷ்பு இட்லி, கொண்டை, ஜாக்கெட் என அவர் பெயர் வைத்து பிரபலம் ஆகாத விஷயமே இல்லை என்று கூறலாம்.
இவர் சினிமாவில் மார்க்கெட் குறையவே அப்படியே சின்னத்திரை பக்கம் சென்று அங்கும் நிறைய ஹிட் நிகழ்ச்சிகளை கொடுத்தார்.
அரசியலில் குஷ்பு
இப்படி சினிமாவில் பல சாதனைகளை செய்து வந்தாலும் குஷ்புவிற்கு அரசியலில் பெரிய அளவில் வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதனால் அரசியலில் கடந்த சில வருடங்களாக அதிக ஈடுபாடு காட்டி வருகிறார்.
அடுத்தடுத்து செய்யும் அவரது பணிகள் கூட அரசியல் சம்பந்தப்பட்டு தான் இருக்கிறது.
குஷ்பு வெளியிட்ட புகைப்படம்
குஷ்பு எப்போதும் ஆக்டீவாக சமூக வலைதளத்தில் இருக்கும் ஒரு பிரபலம். டுவிட்டரில் சமூக விஷயங்களை பற்றி பேசும் குஷ்பு இன்ஸ்டா பக்கத்தில் தனது குடும்ப புகைப்படங்களை அதிகம் பதிவிட்ட வண்ணம் இருப்பார்.
தற்போது அவர் தனது அம்மாவின் புகைப்படத்தை முதன்முறையாக டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார். இன்று அவரது பிறந்தநாள் என்பதால் ஸ்பெஷல் பதிவு போட்டுள்ளார் குஷ்பு.
இதோ பாருங்கள்,
Mother!! Truly God sent. Everything is replaceable but a mother. My Ammi is my the most beautiful woman I have ever met. As she celebrates her 78th birthday today, I thank Allah for giving me a messenger of love,compassion,empathy,humanity n grace. HAPPY BIRTHDAY AMMI! ❤️✨️? pic.twitter.com/hodgZh6W2D
— KhushbuSundar (@khushsundar) May 3, 2022