உடல் எடை குறைத்த புகைப்படம் பார்த்து ரசிகரின் மோசமான கமெண்ட்- பதிலடி கொடுத்த குஷ்பு
கொரோனா லாக் டவுன் பலருக்கு கஷ்டத்தை கொடுத்தாலும் சிலர் முக்கியமான விஷயங்களுக்கு அந்த நாட்களை பயன்படுத்திக் கொண்டார்கள்.
சிலர் தங்களது உடல் எடையை குறைக்கும் வேலையில் அதிகம் ஈடுபட்டார்கள், பிரபலங்களில் நிறைய பேர் உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்கள்.
சிம்பு, வித்யூ லேகா, சீரியல் நடிகை கிருத்திகா இப்போது குஷ்பு என பலர் ஆளே மாறியுள்ளனர்.
குஷ்பு உடல் எடையை குறைத்து பதிவிட்ட புகைப்படத்திற்கு நிறைய நல்ல கமெண்ட் வந்தது. அதில் ஒருவர் Photo Edit Tool வைத்து எல்லாமே சாத்தியமாகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம் என கமெண்ட் செய்தார்.
அதற்கு குஷ்பு, நீங்களும் முழுக்க முழுக்க எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தாழ்வு மனப்பான்மை நிரம்பியிருக்கும் ஒருவராக இருக்கிறீர்கள் என பதிலடி கொடுத்துள்ளார்.
And you set a fine example of how some morons are filled with negativity n inferiority complex. Pity you. https://t.co/Sq7bYJTAwE
— KhushbuSundar (@khushsundar) August 24, 2021