அந்த படத்தில் ஏன் நடித்தோம் என்று இருக்கிறது, இயக்குனரால் நடித்தேன்- என்ன படம், கிரண் ஓபன் டாக்
நடிகை கிரண்
தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான படம் ஜெமினி.
அப்படத்தை தொடர்ந்து அஜித்தின் வில்லன், கமல்ஹாசனின் அன்பே சிவம் போன்ற படங்களில் நடித்து வந்தார். பின் வின்னர் படத்தில் பிரசாந்த் ஜோடியாக நடித்து கவர்ச்சி நாயகியாக அங்கீகாரம் பெற்றார்.
அதன்பின் கதாநாயகியாக அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போன துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இடையில் சில காலம் காணாமல் போன இவர் கடந்த 2015ம் ஆண்டு நடிப்பில் வெளியான ஆம்பள திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இறுதியாக சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான முத்தின கத்திரிக்காய் படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றி இருந்தார் கிரண்.
நடிகையின் பேட்டி
அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை கிரண் பேசும்போது, சினிமாவில் எனக்கு நிறைய கசப்பான அனுபவங்கள் உள்ளது, மன அழுத்தம் ஏற்பட்டது என கூறிய அவரிடம் இந்த படத்தில் ஏன் நடித்தேன் என நீங்கள் யோசித்தது உண்டா என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், சுந்தர் சி அண்ணன் என்னுடைய அண்ணா போன்றவர், அதனால் நான் எந்த கதாபாத்திரம் இருந்தாலும் கொடுங்கள் என்று சொன்னேன்.
ஆம்பள படத்தில் ஏதோ செட் பிராப்பரிட்டியாக மாறிவிட்டேன், என்னால் அந்த படத்தில் எதுவும் செய்ய முடியவில்லை, ஏன் நடித்தோம் என வருந்தினேன் என கிரண் கூறியுள்ளார்.

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
