70களில் Royal Enfield பைக் ஓட்டி அசத்தியுள்ள நடிகை கே.ஆர்.விஜயா- இதுவரை யாரும் பார்த்திராத போட்டோ
கே.ஆர்.விஜயா
தமிழில் 70 மற்றும் 80களில் கலக்கிய நாயகிகளை இப்போதும் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள், அந்த அளவிற்கு அந்த காலத்தில் படைப்புகள் இப்போதும் பேசப்படுகிறது.
அப்படி 60, 70களில் டாப் நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை கே.ஆர். விஜயா. எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்ஷங்கர் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் படங்கள் நடித்துள்ள இவர் புன்னகை அரசி என்றழைக்கப்பட்டார்.
தந்தையின் விருப்பத்திற்காக நடிப்பில் களமிறங்கிய கே.ஆர்.விஜயா 1963ம் ஆண்டு வெளியான கற்பகம் படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார்.
அன்ஸீன் போட்டோ
குறுகிய காலகட்டத்தில் முன்னணி டாப் நடிகையாக வலம் வந்தவர் தென்னிந்திய மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
60 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்துவரும் கேஆர் விஜயாவின் இதுவரை பார்த்திராத புகைப்படம் தான் வைரலாகி வருகிறது.
தற்போது பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வரும் ராயல் என்பீல்டு பைக்கை, 70 களிலேயே ஒட்டி அசத்தியுள்ளார் நடிகை கேஆர் விஜயா.

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
