குஷ்பு இட்லி என பெயர் வரக் காரணம் அந்த நடிகர் தானா?.. நடிகையே பகிர்ந்த தகவல்
குஷ்பு
நடிகை குஷ்பு, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இவரைப்பற்றிய ஒரு அறிமுகம் கொடுக்கவே வேண்டாம்.
80களில் நடிக்க தொடங்கி தென்னிந்திய சினிமாவில் ஒரு கலக்கு கலக்கியவர். வெள்ளித்திரையில் மாஸ் காட்டிய குஷ்பு சின்னத்திரையில் ஒரு கலக்கு கலக்கினார்.
சீரியல் நடிகையாக, தொகுப்பாளினியாக இருந்தவர் இன்னொரு பக்கம் அரசியலிலும் ஒரு வலம் வருகிறார். எந்த விஷயமாக இருந்தாலும் தைரியமாக பேசக் கூடிய குஷ்பு அதனாலும் நிறைய பிரச்சனைகளை சந்தித்துள்ளார்.
நடிகை பேட்டி
இந்த நிலையில் நடிகை குஷ்பு, குஷ்பு இட்லி என பிரபலமாக யார் காரணம் என்ற விவரத்தை கூறியுள்ளார்.
அந்த பேட்டியில் அவர், ஒரு படப்பிடிப்பில் பிரபு சார் எதார்த்தமாக என் கன்னத்தை பிடித்து அப்படியே இட்லி மாதிரி இருக்கன்னு சொன்னாரு.
அன்னைக்கு வந்தது தான் குஷ்பு இட்லி பெயர், இன்னைக்கு வரை யாரும் மறக்கல, அப்போ எல்லாருமே சிரிச்சிட்டாங்க. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அப்படி ஒரு டயலாக்கே கிடையாது.
அவரே வந்து வேற ஏதோ ஒரு டயலாக் சொல்லணும், அதற்கு பதிலாக இட்லி மாதிரி இருக்கிறது என்று செல்லிட்டார் என குஷ்பு பகிர்ந்துள்ளார்.

ரஷ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் பார்க்கும் இந்தியா! அமெரிக்கா விடுத்த அடுத்த எச்சரிக்கை News Lankasri
