இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் என உங்களுக்கு தெரிகிறதா.. அட இவரா
சிறு வயது புகைப்படம்
திரையுலகில் உள்ள பிரபலங்களின் Unseen புகைப்படங்கள் வைரலாகும். அந்த வகையில் பிரபல நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
குஷ்பூ
இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும், இவர் யார் என கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர் வேறு யாரும் இல்லை, நடிகை குஷ்பூதான். ஆம், நடிகை குஷ்பூ சுந்தர்.சியின் சிறு வயது புகைப்படம்தான் அது.
நடிகை குஷ்பூ பாலிவுட் சினிமா மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின் கதாநாயகியாக சினிமாவில் கால்பதித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
என்னதான் ஹிந்தி சினிமா மூலம் இவர் அறிமுகமாகி இருந்தாலும் கூட, தமிழ் சினிமாதான் குஷ்பூவிற்கு தனி அடையாளத்தை உருவாக்கியது. தர்மத்தின் தலைவன், சின்னதம்பி, மன்னன், நாட்டாமை, அண்ணாமலை, மைக்கேல் மதன காமராஜன் என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இதுவரை சினிமாவில் 37 ஆண்டுகளை குஷ்பூ கடந்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.