54 வயதில் நடிகை குஷ்பு 20 கிலோ இந்த ஊசி போட்டுத்தான் குறைத்தாரா?.. உண்மை என்ன?
நடிகை குஷ்பு
நடிகை குஷ்பு, 80களில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர்களில் ஒருவர்.
நாயகி என்பதை தாண்டி இப்போது அரசியல் வாதியாகவும் தனது ஈடுபாட்டை காட்டி வருகிறார். படங்கள் தயாரிக்கும் வேலைகளிலும் பிஸியாக இருக்கும் குஷ்பு சமீபத்தில் ஒரு புதிய சீரியலிலும் நடிக்க துவங்கியுள்ளார்.
சமீபத்தில் நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக இன்ஸ்டாவில் கூறியிருந்தார். தனது பக்கத்தில் இருந்து வரும் மெசேஜ் எதற்கும் பதில் அளிக்க வேண்டாம் என அறிவித்திருந்தார்.
உடல்எடை
குஷ்புவின் டுவிட்டர் ஹேக் செய்யப்பட்டது குறித்து பரபரப்பாக பேசப்பட இன்னொரு விஷயமும் வைரலாகிறது. அதாவது நடிகை குஷ்பு 54 வயதில் மவுன்ஜாரோ ஊசியால் தான் 20 கிலோ எடையை குறைத்தார் என டுவிட்டரில் ஒருவர் பதிவு செய்திருந்தார்.
இதனை கண்ட குஷ்பு, உங்களைப் போன்றவர்கள் எங்களுக்கு எப்போதும் தலைவலியாக இருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் முகத்தைக் காட்ட மாட்டீர்கள்.
ஏன் என்று உங்களுக்குத் தெரியும். உங்கள் மனம் எவ்வளவு அழுக்காக இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் பெற்றோருக்காக வருந்துகிறேன்