தளபதி 68 நாயகி லைலாவின் முழு குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய புகைப்படம்
தளபதி 68
விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முதற்கட்ட படப்பிடிப்பு பாடல் காட்சியுடன் முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சண்டை காட்சியுடன் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று இப்படத்தின் பூஜை வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர்.
இந்த வீடியோவில் யார்யாரெல்லாம் படத்தில் நடிக்கிறார்கள் என அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டது. பிரஷாந்த், பிரபு தேவா, மைக் மோகன், சினேகா, லைலா, மீனாக்ஷி சவுத்ரி, ஜெயராம், யோகி பாபு என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறார்கள்.
நடிகை லைலா குடும்பம்
இதில், முதல் முறையாக விஜய்யுடன் இணைந்து நடிகை லைலா நடிக்கிறார். இவர் ஏற்கனவே விஜய்யுடன் இணைந்து உன்னை நினைத்து படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால், சில காரணங்களால் விஜய் அப்படத்திலிருந்து வெளியேறிவிட்டார். கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு பின் இந்த ஜோடி தளபதி 68ல் இணைந்துள்ளனர்.
ஆனால், இருவரும் ஜோடியாக நடிக்கிறார்களா என்று தெரியவில்லை. இந்நிலையில், தளபதி 68 படத்தில் நடித்து வரும் நடிகை லைலாவின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. தனது கணவர் மற்றும் இரு பிள்ளைகளுடன் லைலா எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் இதோ..

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
