நீண்ட இடைவேளைக்கு பிறகு இன்ஸ்டாவிற்கு வந்த லட்சுமி மேனன்- என்ன போட்டோ பாருங்க
லட்சுமி மேனன்
மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்த நாயகிகள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் லட்சுமி மேனன். மலையாளத்தில் இரண்டே படங்கள் நடித்த அவர் அப்படியே தமிழ் சினிமா பக்கம் வந்தார்.
கடந்த 2012ம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
முதல் படமே நல்ல ஹிட் கொடுக்க அடுத்தடுத்து கும்கி, குட்டிபுலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், கொம்பன் என்று தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்தார்.
கிராமத்து பின்னணி கதைகளில் அதிகம் நடித்து ரசிகர்களை கவர்ந்த லட்சுமி மேனன் இப்போதெல்லாம் அவ்வளவாக படங்கள் நடிப்பது இல்லை.
நடிகையின் லேட்டஸ்ட்
தமிழ் திரையுலகில் தலையை காட்டாமல் இருந்து வந்த லட்சுமிக்கு தற்போது கைவசம் சந்திரமுகி 2, சிப்பாய் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளன.
சினிமாவை போல இன்ஸ்டா பக்கமும் வருவதை குறைத்த லட்சுமி மேனன் நீண்ட இடைவேளைக்கு பிறகு புடவையில் அழகிய போட்டோ போட்டுள்ளார்.
தற்போது அந்த புகைப்படம் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்து வருகிறது.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
