ஆக்சனில் வெளுத்து வாங்கும் 96 பட புகழ் கௌரி கிஷன்.. ட்ரெண்டிங் வீடியோ இதோ
கௌரி கிஷன்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் கௌரி கிஷன். இவர் பிரபல தெலுங்கு நடிகை வீணா கிஷனின் மகள் ஆவார்.
மலையாளத்தில் வெளிவந்த மார்க்கம்களி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் கௌரி கிஷன். இதையடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.
இவர் கடைசியாக 'சுழல் 2' என்ற வெப் தொடரில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில், ஆக்சன் காட்சிகளில் பட்டையைக் கிளப்பி இருந்தார்.
ட்ரெண்டிங் வீடியோ
இந்நிலையில், அந்த சண்டை காட்சிகளுக்கு எவ்வாறு கௌரி பயிற்சி மேற்கொண்டுள்ளார் என்பது குறித்து வீடியோ ஒன்றை தற்போது அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri
