சிறையில் இருந்து வெளியே வந்த தனது கணவருடன் நடிகை மகாலட்சுமி போட்ட பதிவு- உருக்கமான பதிவு
ரவீந்தர்-மகாலட்சுமி
தமிழ் சினிமாவில் பல பிரபலங்களின் திருமணங்கள் கொண்டாடப்பட்டுள்ளது.
ஆனால் ஒரு ஜோடியின் திருமண புகைப்படம் பார்த்து என்னது இவர்கள் ஜோடி சேர்ந்துள்ளார்களா என வியந்தது தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் நடிகை மகாலட்சுமியை பார்த்து தான்.
இவர்கள் எந்த ஒரு கிசுகிசுவும் வெளிவராத வகையில் பழகி ஒருவருக்கொருவர் பிடித்து போக திருமணமும் செய்து கொண்டார்கள்.
திருமணம் ஆன நாள் முதல் இவர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஜோடியாகவே உள்ளார்கள்.

லேட்டஸ்ட் க்ளிக்
கடந்த சில நாட்களுக்கு முன் பண மோசடி செய்ததாக தயாரிப்பாளர் ரவீந்தர் கைது செய்யப்பட்டார். பரபரப்பாக இவரது வழக்கு குறித்து மக்கள் பேச சமீபத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.
இந்த நிலையில் நடிகை மகாலட்சுமி சிறையில் இருந்து வெளியே வந்த தனது கணவருடன் புகைப்படம் எடுத்து அழகிய பதிவோடு போஸ்ட் போட்டுள்ளார்.