நட்சத்திரங்கள் பற்றி ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு அதிரடியாக பதிலளித்த நடிகை மாளவிகா மோகனன்.. என்ன கூறினார் தெரியுமா
மாளவிகா மோகனன்
மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தமிழில் 'பேட்ட', 'மாஸ்டர்' ,'மாறன்' போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதை தொடர்ந்து, சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த தங்கலான் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்து கொண்டார்.
மாளவிகா மோகனன் பதில்
இந்நிலையில், சமீபத்தில் நடிகை மாளவிகா மோகனன் அவரது ட்விட்டர் தளத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில், ரசிகர் ஒருவர் ஹாரர் படத்தில் உங்களை பேயாக பார்க்க முடியுமா? என்று கேட்டதற்கு, மாளவிகா என்னை ஏன் பேயாக பார்க்க வேண்டும் என்று பதிலளித்துள்ளார்.
வேறு ரசிகர், உங்களுக்கு பிடித்த விக்ரம் படம் எது என்று கேள்வி எழுப்பினர் அதற்கு, எனக்கு விக்ரம் நடித்த பல படங்கள் பிடிக்கும் ஆனால், அதில் குறிப்பாக அவர் நடித்த பொன்னியின் செல்வன் படம் எனக்கு மிகவும் பிடித்த படம் என்று பதிலளித்துள்ளார்.
மேலும், வேரொருவர் தற்போது நீங்கள் நடித்து கொண்டிருக்கும் படம் எது என்று கேட்டதற்கு, நான் இப்போது 'சர்தார் 2' படத்தில் ஒரு வித்தியாசமான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறேன். தொடர்ந்து பல கேள்விகளுக்கு பதிலளித்த மாளவிகா அவர் நடிகை ஐஸ்வர்யா ராயின் மிகப்பெரிய ரசிகை என்று கூறியுள்ளார்.

Super Singer: உடனே எனது ஸ்டூடியோவிற்கு வந்திடு... சிறுமிக்கு விருந்தினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி Manithan

தந்தை மீது கொடூர தாக்குதல்.. பெற்ற பிள்ளைகளின் வெறிச்செயல் - போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்! IBC Tamilnadu
