உடம்பில் ஏற்பட்ட அந்த பிரச்சனை.. ஐந்து மருத்துவர்களை சந்தித்த மாளவிகா மோகனன்!!
மாளவிகா மோகனன்
மலையாள ஹீரோயின்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த லிஸ்டில் இருப்பவர்களில் ஒருவர் மாளவிகா மோகனன்.
தமிழில் மூன்று படங்கள் நடித்திருந்தாலும் தனக்கென பல ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்து இருக்கிறார்.
தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தாங்கலான் திரைப்படத்தில் மாளவிகா மோகனன் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வெளியாக இருக்கிறது.

பேட்டி
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை மாளவிகா மோகனன், தங்கலான் படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், " நான் தங்கலான் படத்தில் நடித்துள்ள கதாபாத்திரத்திற்கு கண்களில் லென்ஸ் போட்டு நடிக்கவேண்டியதாக இருந்தது. இதனால் எனக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டது. அதுபோல எனக்கு தோல் தொடர்பான பிரச்னை ஏற்பட்டது. இந்த பிரச்னையை சரி செய்ய படப்பிடிப்புக்கு மத்தியில் நான் மொத்தம் ஐந்து மருத்துவர்களைச் சந்தித்தேன்” என்று மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.

தேர்தலில் வாக்களிக்க விரும்பும் வெளிநாட்டு வாழ் இஸ்ரேலியர்கள்... தடுத்து நிறுத்த போராடும் நெதன்யாகு News Lankasri
ஹவுதிகளால் பதற்றத்தில் சவுதி அரேபியா... வார இறுதியில் வெள்ளை மாளிகைத் திரும்பிய ட்ரம்ப் News Lankasri