50% உடற்பயிற்சி, 50% புலம்பல், காலையிலேயே நடிகை மஞ்சிமா மோகனுக்கு என்ன ஆனது?
மஞ்சிமா மோகன்
மலையாள சினிமாவில் நடிக்க தொடங்கி தமிழ் பக்கம் வந்த பிரபலங்கள் பலர் உள்ளனர், அப்படி ஒரு நடிகை தான் மஞ்சிமா மோகன்.
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், பின் சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், எஃப்ஐஆர் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
சமீபத்தில் சுழல் 2 என்ற ஹாட்ஸ்டார் வெப் தொடரில் நடித்தார், அதில் அவரது நடிப்பிற்கும் பாராட்டு குவிந்து வருகிறது.
லேட்டஸ்ட்
சினிமாவில் அவ்வளவாக ஆக்டீவாக இல்லாமல் இருந்தாலும் மஞ்சிமா மோகனை இன்ஸ்டாவில் 2 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்கள் உள்ளனர்.
காலை 6.52 மணிக்கு ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவையும், அவர் ஒர்க் அவுட் செய்வதை டிரெயினர் பார்வையிடும் காட்சிகளையும் கொண்ட வீடியோவை பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோவின் கேப்ஷனாக "50% உடற்பயிற்சி, 50% உடற்பயிற்சி எவ்வளவு கடினம் என்று புலம்புவது! ஆனாலும், என்ன செய்ய? உடற்பயிற்சி தினமும் செய்துதான் ஆக வேண்டியது உள்ளது." என்று பதிவு செய்துள்ளார்.