47 வயதிலும் முன்னணி நாயகியாக கலக்கும் மஞ்சு வாரியரின் சொத்து மதிப்பு... எத்தனை கோடி தெரியுமா?
மஞ்சு வாரியர்
மஞ்சு வாரியர், மலையாள சினிமா கொண்டாடும் முன்னணி நடிகைகளில் ஒருவர்.
மோகன்லால், மம்முட்டி என டாப் நடிகர்களுடன் படங்கள் நடித்திருப்பவர் தமிழில் அசுரன், துணிவு, விடுதலை 2, வேட்டையன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது ஆர்யா-கவுதம் கார்த்திக் கூட்டணியில் உருவாகி வரும் மிஸ்டர் எக்ஸ் படத்தில் நடித்து வருகிறார். 47 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் சிறந்த படங்கள் நடிக்க மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
சொத்து மதிப்பு
ஒவ்வொரு பிரபலத்தின் பிறந்தநாள் அன்றும் அவர்களின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைதளங்களில் வலம் வரும்.
அப்படி தனது 47வது பிறந்தநாளை கொண்டாடும் மஞ்சு வாரியர் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது.
அடுத்தடுத்து நிறைய படங்கள், விளம்பரங்கள் என நடித்துவரும் நடிகை மஞ்சு வாரியர் சொத்து மதிப்பு ரூ. 150 முதல் ரூ. 160 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.