தனது திருமண புகைப்படங்களை முதன்முறையாக வெளியிட்ட பிக்பாஸ் புகழ் ஜுலி... புகைப்படங்கள் இதோ
பிக்பாஸ்
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக உள்ளது பிக்பாஸ்.
பல வருடங்களுக்கு முன்பு தமிழக மக்களுக்கு பரீட்சயமே இல்லாத நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக தொடங்கி இப்போது 9வது சீசன் வரை ஒளிபரப்பாகியுள்ளது. கடைசியாக ஒளிபரப்பாகி முடிந்த பிக்பாஸ் 9வது சீசனின் வெற்றியாளராக பிரபல சீரியல் நடிகை திவ்யா அறிவிக்கப்பட்டார்.
திருமணம்
இந்த பிரம்மாண்டமான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடம் அதிகம் பிரபலமானவர் தான் ஜல்லிக்கட்டு புகழ் ஜுலி. இந்நிகழ்ச்சி மூலம் நல்ல பெயர் பெறுவார் என்று பார்த்தால் மோசமான பெயரை தான் எடுத்தார்.
ஆனால் சில வருடங்கள் கழித்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்குபெற்றவர் மக்களுக்கு தன் மீது உள்ள பார்வையை மாற்றினார்.
கடந்த சில தினங்களுக்கு முன் ஜுலிக்கு அவரது நண்பருடன் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது. தற்போது தனது திருமண புகைப்படங்களை அவர் ஷேர் செய்துள்ளார்.