என் கணவர் இறப்பிற்கு இதுதான் காரணம்- முதன்முறையாக கூறிய நடிகை மீனா
நடிகை மீனா
தமிழ் சினிமா நடிகர்களால் 90களில் கொண்டாடப்பட்ட நடிகை மீனா. இவர் ரஜினி, கமல், அஜித் என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளார், அதோடு தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் எனவும் பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.
இப்போது மலையாளம் படங்களில் அதிக படங்கள் நடித்து வருகிறார், கடைசியாக த்ரிஷ்யம் 2ம் பாகத்தில் நடித்திருந்தார்.
படங்கள் நடிப்பதை தாண்டி மீனா போட்டோ ஷுட்கள் கூட நிறைய எடுத்து வந்தார்.

கணவர் இறப்பு
நடிப்பு, கொண்டாட்டம் என இருந்த நடிகை வாழ்க்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கடும் சோகத்தை கொடுக்கும் விஷயம் நடந்தது. அதாவது அவரது கணவர் வித்யாசாகர் அவர்கள் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
தனது கணவர் இறப்பு குறித்து முதன்முறையாக பேசிய மீனா கூறுகையில், தனது கணவர் இறப்பு எதிர்ப்பார்க்காமல் நடந்தது என்றும் நாங்கள் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று.
வித்யாசாகர் தங்கி இருந்த மும்பை அப்பார்ட்மெண்டில் அதிக புறாக்கள் இருந்ததாகவும், அதன் எச்சத்தினால் தான் வித்யாசாகருக்கு நுரையீரல் பிரச்சனை ஏற்பட்டது.
கொரோனாவிலிருந்து நாங்கள் மீண்டும், ஏற்கனவே நுரையீரல் பாதிக்கப்பட்ட தனது கணவர் மீள முடியாமல் உயிரிழந்து விட்டதாக மிகவும் சோகமாக தெரிவித்துள்ளார் மீனா.
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri