நடிகை மீனா 90களில் தமிழ் சினிமாவை கலக்கியவர். அவரது கணவர் வித்யாசாகர் கடந்த வருடம் நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்தார்.
கணவர் இறந்தபின் மீனாவை சோகத்தில் இருந்து மீண்டு வர அவரது தோழிகள் தான் உதவி செய்தனர். அதில் குறிப்பிடத்தக்கவர் கலா மாஸ்டர். மீனா கணவரின் இறுதி சடங்குகளுக்கான ஏற்பாடுகளையும் அவர் தான் கவனித்தார்.
இரண்டாம் திருமணம்?
மீனா இரண்டாம் திருமணம் செய்ய இருக்கிறார் என தொடர்ந்து செய்திகள் அடிக்கடி பரவிக்கொண்டே தான் இருக்கிறது. இதுபற்றி கலா மாஸ்டர் தற்போது ஒரு பேட்டியில் கோபமாக பேசி இருக்கிறார்.
"சின்ன வயது பெண் அவரது கணவரை இழந்த துக்கத்தில் இருந்து மீண்டு வர எத்தனை வருடங்கள் ஆகும். அதை பற்றி நாமே யோசிக்க வேண்டாமா. இதை பற்றி சிலர் என்னிடமே கேட்டார்கள்.. 'எதற்கு stupid-ஆ கேள்வி கேக்குறீங்க' என நான் திட்டிவிவிட்டேன்."
"தோழிகள் நாங்கள் மீனாவிடம் பேசும்போது இரண்டாம் திருமணம் பற்றி விளையாட்டாக கேட்டால் கூட, அவள் கோபமாகி முறைப்பாள். இரண்டாம் திருமணம் செய்ய இது என்ன காய்கறி வாங்குவது போல ஈஸியா என்ன" என கலா மாஸ்டர் கூறி இருக்கிறார்.