பாலிவுட்டில் அறிமுகமாகும் விஜய் பட பிரபல நடிகை மீனாட்சி.. வேற லெவல் நியூஸ்
மீனாட்சி சவுத்ரி
மிஸ் இந்தியா டைட்டில் ஜெயித்து அதன் பின் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கியவர் மீனாட்சி சவுத்ரி. இவர் தமிழில் விஜய் ஜோடியாக GOAT படத்தில் நடித்து அதன் மூலம் பிரபலமானார்.
அதை தொடர்ந்து, துல்கர் சல்மானுடன் இணைந்து லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.
இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி மற்றும் துல்கர் சல்மானுடன் இணைந்து ராம்கி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்து வசூலில் சாதனை படைத்தது.
வேற லெவல் நியூஸ்
இந்நிலையில், தற்போது மீனாட்சி பாலிவுட் சினிமா பக்கம் சென்றுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, 'ஸ்த்ரீ, மிமீ' போன்ற ஹிட் படங்களை தயாரித்த தினேஷ் விஜய் தயாரிக்கும் புதிய படத்தில் மீனாட்சி சவுத்ரி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது, மீனாட்சி பாலிவுட் பக்கம் செல்வது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
