பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நடிகை மீனாட்சி சவுத்ரி.. அதுவும் இவாரா?
மீனாட்சி சவுத்ரி
மிஸ் இந்தியா டைட்டில் ஜெயித்து அதன் பின் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கியவர் மீனாட்சி சவுத்ரி. இவர் தமிழில் விஜய் ஜோடியாக GOAT படத்தில் நடித்து அதன் மூலம் பிரபலமானார்.
அதை தொடர்ந்து, துல்கர் சல்மானுடன் இணைந்து லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார். இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி மற்றும் துல்கர் சல்மானுடன் இணைந்து ராம்கி ஆகியோர் நடித்திருந்தனர்.
படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்து வசூலில் சாதனை படைத்தது.
அதுவும் இவாரா?
இந்நிலையில், முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை மீனாட்சி சவுத்ரி அடுத்து நடிக்கப்போகும் படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, நாக சைதன்யாவின் 24-வது படத்தில் மீனாட்சி இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கார்த்திக் தண்டு இயக்கத்தில் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் புஷ்பா பட இயக்குநரின் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிகின்றது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.