சரத்குமார் பட நடிகைக்கு திடீர் நிச்சயதார்த்தம்.. போட்டோவுடன் இதோ
மலையாள சினிமாவில் பாப்புலர் ஆன நடிகை மீரா நந்தன். அவர் தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்து இருக்கிறார். சரத்குமார் ஜோடியாக சண்டமாருதம், வால்மீகி உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.
சமீப காலமாக மீரா நந்தன் தாராளமான கவர்ச்சி காட்டவும் தொடங்கி இருந்தார். அது விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் அவர் அதற்கு பதிலடியும் கொடுத்து இருந்தார். துபாயில் வசிக்கும் நான் அப்படி தான் டிரெஸ் போடுகிறேன் என கூறி இருந்தார் அவர்.
நிச்சயதார்த்தம்
இந்நிலையில் தற்போது மீரா நந்தன் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார்.
லண்டனை சேர்ந்த ஸ்ரீஜு என்பவருடன் தான் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது. இது காதல் திருமணம் இல்லை, பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம் தானாம்.
தற்போது மீரா நந்தனுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.