இந்த தமிழ் நடிகர் பேசி பேசி தாஜ்மஹாலை கூட வித்துடுவார்: நடிகை மோகினி
நடிகை மோகினி ஏராளமான ஹிட் படங்களில் நடித்து இருப்பவர். படங்களுக்கு பிறகு சின்னத்திரையில் நுழைந்த அவர் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார்.
தற்போது 49 வயதாகும் மோகினியை சமீப காலமாக எந்த படங்களிலோ, தொடர்களிலோ பார்க்க முடிவதில்லை. இந்நிலையில் நடிகை மோகினி அளித்த ஒரு பேட்டியில் பார்த்திபன் பற்றி பேசி இருக்கிறார்.

தாஜ்மஹாலை விற்று விடுவார்
நடிகர் பார்த்திபன் பேசி பேசியே தாஜ் மஹாலை கூட விற்றுவிடுவார் என மோகினி கூறி இருக்கிறார்.
அவர் அப்படி கூறியதற்கு பதில் அளித்து இருக்கும் பார்த்திபன் "மோகினி பிசாசு இதெல்லாம் நம்பல பயமுறுத்தும்னு சொன்னா நான் நம்பல. இப்ப நம்புறேன். இந்த பாராட்டுக்குப் பின்னாடி எவ்வளவு புத்திசாலித்தனம் இருக்கு? எவ்வளவு அன்பும் நம்பிக்கையும் இருக்கு?"
"உடனடியா தாஜ்மஹாலை now’ember லயே வித்து, நான் நினைக்கிற ‘dark web’படத்தை பெரும் பொருட்செலவுல எடுத்து மீண்டும் ஒரு உயர்ந்த இடத்தைப் பிடிக்கிற உத்வேகம் குடுத்துருக்கு. அவங்கக் கூட நடிக்கும் போது அம்பத்து ரெண்டு வார்த்தைக் கூட பேசியிருக்க மாட்டேன்" என பார்த்திபன் பதிவிட்டு இருக்கிறார்.
மோகினி பிசாசு இதெல்லாம் நம்பல பயமுறுத்தும்னு சொன்னா நான் நம்பல. இப்ப நம்புறேன். இந்த பாராட்டுக்குப் பின்னாடி எவ்வளவு புத்திசாலித்தனம் இருக்கு ?எவ்வளவு அன்பும் நம்பிக்கையும் இருக்கு?
— Radhakrishnan Parthiban (@rparthiepan) November 2, 2025
உடனடியா தாஜ்மஹாலை now’ember லயே வித்து, நான் நினைக்கிற ‘dark web’படத்தை பெரும் பொருட்செலவுல… https://t.co/EIyQkUGOkC