ஏ.ஆர். ரஹ்மானை திருமணம் செய்ய ஆசைப்பட்ட பிரபல நடிகை.. யார் தெரியுமா?
ஏ.ஆர். ரஹ்மான்
இசைப்புயல், ஆஸ்கர் நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஏ.ஆர். ரஹ்மான். இவர் இசையில் அடுத்ததாக பெத்தி, மூன் வாக், ராமாயணா பார்ட் 1 மற்றும் பார்ட் 2, கில்லர் என பல படங்கள் வெளிவரவுள்ளது. இதில் ராமாயணா திரைப்படத்தில் உலக புகழ்பெற்ற இசையமைப்பாளர் Hans Zimmer உடன் இணைந்து ரஹ்மான் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரை பிரபலங்கள் அவ்வப்போது அளிக்கும் பேட்டி இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் பிரபல நடிகை மோகினி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஏ.ஆர். ரஹ்மானை திருமணம் செய்ய ஆசைப்பட்டதாக கூறியுள்ளார்.
நடிகை மோகினி
இதில், "நான் ஏ.ஆர். ரஹ்மானின் தீவிர ரசிகை, வெறித்தனமான அன்பு இருந்தது என்றே சொல்லலாம். அவர் இஸ்லாமிற்கு மாறியது எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது. அப்போது நான் இந்துவாக இருந்தேன். திலீப் என்ற பெயரே போதுமானதாக இருந்தது, மதம் மாறாமல் இருந்திருந்தால் வீட்டில் இவரை எனக்கு பிடித்திருக்கிறது, திருமணம் செய்துகொள்ள வேண்டும் என சொல்வதற்கு வசதியாக இருந்திருக்கும்" என கூறியுள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மானை திருமணம் செய்ய ஆசைப்பட்டதாக நடிகை மோகினி பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் தமிழில் வெளிவந்த கூட்டு புழுக்கள் படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து ஈரமான ரோஜாவே, நாடோடி பாட்டுக்காரன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். பின் 2011ஆம் ஆண்டுக்கு பின் சினிமாவிலிருந்து விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.