நடிகை மிருணாள் தாகூரின் அடுத்த படத்தின் அதிரடி அப்டேட்.. ஹீரோ இவரா?
மிருணாள் தாகூர்
தெலுங்கில் வெளிவந்த சீதா ராமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர்.
இதை தொடர்ந்து இவர் தெலுங்கில் நடித்து வெளிவந்த Hi நானா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது.
இதனால் தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் திரையுலகில் மிருணாள் தாகூருக்கு அதிக பட வாய்ப்புகள் வருகிறது.
படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வரும் மிருணாள் தாகூர் அடுத்ததாக Son of Sardaar 2, Dacoit: A Love Story ஆகிய திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
ஹீரோ இவரா?
இந்நிலையில், மிருணாள் தாகூர் தனது அடுத்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, அல்லு அர்ஜுன், அட்லீ இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் மிருணாள் நடிக்க உள்ளார்.
3 கதாநாயகிகளான ஜான்வி கபூர், ஸ்ரத்தா கபூர் மறும் திஷா பதானி உள்ளிட்டோர் நடிக்க இருக்கும் இந்த படத்தில் மிருணாள் தாகூர் நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri

ரஷ்யாவில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள் குடும்பங்களுக்கு... கிம் ஜோங் உன் அளித்த உறுதி News Lankasri
