நடிகை மிருணாள் தாகூரின் சொத்து மதிப்பு, சம்பளம், பிரம்மாண்ட வீடு.. முழு விவரம் இதோ
மிருணாள் தாகூர்
பான்-இந்தியன் ஸ்டாராக வலம் வரும் நடிகை மிருணாள் தாகூரின் பிறந்தநாள் இன்று. தனது 34-வது பிறந்தநாளை கொண்டாடும் மிருணாளுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

திரை பிரபலங்களின் வீடு, சொத்து மதிப்பு, சம்பள விவரம் உள்ளிட்ட தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளிவரும். அந்த வகையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை மிருணாள் தாகூரின் சொத்து விவரம் மற்றும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சொத்து மதிப்பு
முன்னணி இந்திய நடிகைகளில் ஒருவராக இருக்கும் மிருணாள் தாகூர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 3 கோடி முதல் ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். இதுவே விளம்பரங்களில் நடிக்க ரூ. 50 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது.

இவரிடம் Toyota Fortuner மற்றும் Mercedes S450 4 Matic ஆகிய இரு கார்கள் உள்ளன. இதில் Toyota Fortuner காரின் விலை ரூ. 46 லட்சம் மற்றும் Mercedes S450 4 Matic காரின் விலை ரூ. 2.06 கோடி.
மேலும், மும்பையில் நடிகை மிருணாள் தாகூருக்கு சொந்தமாக அபார்ட்மெண்ட் உள்ளது. இந்த வீட்டின் மதிப்பு ரூ. 10 கோடி என கூறப்படுகிறது.

இறுதியாக, நடிகை மிருணாள் தாகூரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 33 கோடி முதல் ரூ. 40 கோடி வரை இருக்கும் என தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இவை அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.