இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை மைனா நந்தினி... அவரே வெளியிட்ட கியூட் வீடியோ
மைனா நந்தினி
சின்னத்திரை தொடர்களில் நடித்து மக்களிடம் பிரபலமானவர் நடிகை நந்தினி.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் மைனா கதாபாத்திரத்தில் நடிக்க அவரின் கதாபாத்திரத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

ஆரம்பத்தில் விஜேவாக தனது வாழ்க்கையை தொடங்கிய மைனா நந்தினிக்கு சரவணன் மீனாட்சி சீரியல் தான் பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. சீரியல்களிலும் ரியாலிட்டி ஷோக்களிலும் தொடர்ந்து கலந்துகொண்டு வந்தவர் படங்களிலும் நடித்துள்ளார்.
வம்சம் மூலம் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, எங்க வீட்டு பிள்ளை, விக்ரம் என அடுத்தடுத்து நடித்து வந்தார்.

குட் நியூஸ்
சமீபத்தில் புதிய வீடு கட்டியுள்ள விஷயத்தை பூஜை செய்தபோது எடுத்த வீடியோவுடன் இந்த மகிழ்ச்சியான செய்தியை மைனா நந்தினி அறிவித்தார்.

இந்த நிலையில் இன்று மைனா நந்தினி மற்றும் யோகேஷ் தங்களது திருமண நாளை கொண்டாட அதனுடன் ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளனர். அதாவது மைனா நந்தினி மற்றும் யோகேஷ் இருவரும் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார்களாம்.
இதோ அவர்கள் வெளியிட்ட அழகான வீடியோ,