அச்சு அசல் நளினி போலவே இருக்கும் அவரது மகள்.. லேட்டஸ்ட் போட்டோ இதோ
நளினி
சினிமாவில் கதாநாயகியாக ஜொலித்தவர்கள் ஒருகட்டத்தில் அங்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அடுத்து வருவது சின்னத்திரை தான். அப்படி சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வந்து கலக்கி வருபவர் தான் நளினி.
அவர் நடித்த 'சின்ன பாப்பா, பெரிய பாப்பா' உள்ளிட்ட தொடர்கள் பெரிய ஹிட் ஆனது. தற்போது சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் சீரியல்களில் நடித்து வரும் அவர் விஜய் டிவியின் மோதலும் காதலும் என்ற தொடரில் நடித்து வருகிறார்.
மகள், மகன் போட்டோ
நளினி நடிகர் ராமராஜனை திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தனர். அதன் பின் கருத்து வேறுபாட்டால் நளினி - ராமராஜன் பிரிந்துவிட்டனர்.
தற்போது நளினி தனது இரட்டை குழந்தைகள் அருணா மற்றும் அருண் உடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.
நளினியின் மகள் அச்சு அசல் அவரை போலவே இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
You May Like This Video