மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் பிசாசு 2 படத்தில் நடிகை நமிதா

andrea pisasu 2 mysskin namitha krishna moorthy
By Kathick Jul 20, 2021 09:35 AM GMT
Report

மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், பிசாசு.

அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது.

இந்த படத்தையும் மிஷ்கினே இயக்குகிறார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான நவம்பர் ஸ்டோரிஸ் மற்றும் ட்ரிப்பிள்ஸ் வெப் சீரிஸ்களில் நடித்து பிரபலமான நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தி பிசாசு 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம்.

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் பிசாசு 2 படத்தில் நடிகை நமிதா | Actress Namitha In Mysskin Movie

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, விரைவில் மீண்டும் தொடங்க உள்ளது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US