உடல் எடையை குறைத்து ஆளே மாறிய நடிகை நமிதா.. வைரலாகும் வீடியோ
நடிகை நமிதா
90ஸ் கிட்ஸின் மனம் கவர்ந்த நாயகிகளில் ஒருவரான நடிகை நமிதா தனது உடல் எடையை குறைத்து ஆளே மாறியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமிதா. இதன்பின், அஜித், விஜய், சத்யராஜ், அர்ஜுன், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தனக்கென்று தனி இடத்தை பிடித்தார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்த நமிதா, 2019-ஆம் ஆண்டுக்கு பின் சினிமாவில் பெரிதும் தலைகாட்டாமல் இருந்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் எடை
சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும், இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்ந்து தனது ரசிகர்களுடன் இணைப்பில் இருந்து வருகிறார் நடிகை நமிதா. தன்னுடைய அப்டேட்ஸ் எதுவாக இருந்தாலும், அதனை உடனடியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். நமிதா உடல் எடையை குறைத்து ஆளே மாறியிருப்பதை பார்த்து ரசிகர்கள் அவருடைய இந்த Transformation-ஐ பாராட்டி வருகின்றனர்.
இதோ வீடியோ:
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
எம்ஜிஆர் முதல் முதலமைச்சர் விஜய் வரை.. கொல்லூர் மூகாம்பிகைக்கு வாள் காணிக்கை செலுத்துவது ஏன்? IBC Tamilnadu
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri