விலையுயர்ந்த BMW காரை வாங்கியுள்ள நடிகை நவ்யா நாயர்... விலை எவ்வளவு தெரியுமா?
நவ்யா நாயர்
மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவில் நடிக்க வந்து கலக்கிய பிரபலங்கள் பலர் உள்ளார்கள்.
அதில் ஒரு நடிகை தான் நவ்யா நாயர். தமிழில் அழகிய தீயே படத்தின் மூலம் அறிமுகமானவர், பின்னர் சேரனின் மாயக்கண்ணாடி படத்தில் நடித்தார்.
பின்னர் ஒரு சில தமிழ் படங்களில் நடித்தவர் கடைசியாக 2010ம் ஆண்டு வெளியான ரசிக்கும் சீமானே என்ற படத்தில் நடித்தார்.
தொடர்ந்து மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்தவர் கடைசியாக மலையாளத்தில் ஜானகி ஜானே என்ற படத்தில் நடித்தார்.
புதிய கார்
இந்த நிலையில் நடிகை நவ்யா நாயர் புதிய BMW X7 சொகுசு காரை வாங்கி உள்ளார். இந்த காரின் விலை இந்திய சந்தையின் மதிப்புப்படி ரூ. 1.34 கோடி மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
பல வசதிகள் கொண்ட இந்த காரை நவ்யா நாயர் வாங்கிய செய்தி கேட்டு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.