60 நாட்களில் உடல் எடையை குறைத்து ஒல்லியான நடிகை நவ்யா நாயர்- அவரின் Weight Loss டிப்ஸ்
நவ்யா நாயர்
மலையாளத்தில் 2001ம் ஆண்டு வெளியான இஷ்டம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை நவ்யா நாயர்.
பின் தமிழில் 2004ம் ஆண்டு நடிகர் பிரசன்னா நடிப்பில் வெளியான அழகிய தீயே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அவதாரம் எடுத்தார்.
இதைத் தொடர்ந்து சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, அமிர்தம், சில நேரங்களில், ராமன் தேடிய சீதை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
வெயிட் லாஸ்
காலை 1 மணி நேரம், மாலை 1 மணி நேரம் என பிரித்து கொண்டு சின்ன சின்ன வெர்க்கவுட்ஸ் செய்தாராம்.
மாடி படி ஏறுவது, வாக்கிங், சூரிய நமஸ்காரம் போன்றவை இதில் அடங்கும். காலை வெறும் வயிற்றில் வெந்நீர் அதன்பின் அவகாடோ ஸ்மூத்தி, வால்நட் போன்றவை தான் அவர் பின்பற்றிய காலை உணவாம்.
மதிய உணவில் ஒரு கப் சாதம், அதனுடன் எண்ணெய் சேர்த்து சமைக்காத காய்கறிகள், புரோட்டீன் எண்ணெய் சேர்க்காத சிக்கன் அல்லது மீன் தான் எடுத்து கொள்வாராம் நவ்யா.
இரவு முழுக்க முழுக்க ஆவியில் வேக வைத்த உணவு தானாம். 7 மணிக்கும் டின்னரை முடித்து விடுவாராம், அதோடு மறுநாள் காலை 8 மணிக்கு தான் சாப்பிடுவாராம், கிட்டத்தட்ட 12 மணி நேர இடைவெளி.
ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க நடிகர் விநாயகன் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா