ரூ. 100 கோடி பங்களா, ஆடம்பர கார்கள் என வாழும் நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு... பிறந்தநாள் ஸ்பெஷல்
நயன்தாரா
மலையாள சினிமாவில் தனது பயணத்தை தொடங்கி இப்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என படங்கள் நடித்தவர் ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தி சினிமா பக்கமும் சென்றார். ஜவான் படம் அதிகம் வசூல் செய்த இந்தியப் படங்களில் ஒன்றாக உள்ளது.

இந்த படத்தில் நடித்ததற்காக ரூ. 10 கோடி வரை அவர் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் நடித்துவருபவர் 75 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
நடிகை என்பதை தாண்டி ஒரு நல்ல பிசினஸ் பெண்மணியாகவும் வலம் வருகிறார். நடிகை, தயாரிப்பாளர், தொழிலதிபர் என பல துறைகளில் ஈடுபாடு காட்டி ஜெயித்தும் வருகிறார் நயன்தாரா.
சொத்து மதிப்பு
41 வயதாகும் நடிகை நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் நடிகையின் சொத்து மதிப்பு விவரம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அதாவது அவரது முழு சொத்து மதிப்பு ரூ. 180 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
இவர் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், மெர்சிடிஸ் ஜிஎல்எஸ் 350 டி, ஃபோர்டு எண்டெவர், பிஎம்டபிள்யூ 7 சீரி மற்றும் இன்னோவா கிரிஸ்டா உள்ளிட்ட சொகுசு கார்கள் உள்ளன.
ஹைதராபாத், சென்னையில் ரூ. 100 கோடி மதிப்பில் பங்களா மற்றும் கேரளாவில் உள்ள வீடுகள் உட்பட இந்தியா முழுவதும் நயன்தாரா பல ஆடம்பர சொத்துக்களை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
